மேலுார் : மேலுார் கொட்டகுடி அய்யனார்
கோயில் காளை நேற்று உடல்நலக்குறைவால் இறந்தது. கிராமத்தினர் காளையை
அலங்காரம் செய்து ஊர்வலமாக கொண்டு சென்று அடக்கம் செய்தனர். கிராமத்தை
சேர்ந்த 10 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். இக்காளை வடமாடு, ஜல்லிக்கட்டு
போட்டிகளில் பரிசுகளை வென்று கிராமத்திற்கு பெருமை சேர்த்தது
குறிப்பிடத்தக்கது.