சிவகாசி விஸ்வநாத விசாலாட்சி அம்மன் கோயிலில் தேரோட்டம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மே 2012 10:05
சிவகாசி: சிவகாசி விஸ்வநாதசாமி விசாலாட்சி அம்மன் கோயில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.சிவகாசி விஸ்வநாதசாமி விசாலாட்சி அம்மன் கோயில் வைகாசி விழா நடந்து வருகிறது. இதையொட்டி, தினம் சுவாமி அம்பாள் அலங்கரிக்கப்பட்டு மண்டகப்படிகளில் எழுந்தருளி, பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர்.ஒன்பதாம் நாளான நேற்று, புதிதாக வடிவமைக்கப்பட்ட தேரில், சுவாமி அம்பாள் எழுந்தருள தேரோட்டம் நடந்தது. சிவகாசி தெய்வீக பேரவை தலைவர் ராஜப்பன், கோயில் நிர்வாக அதிகாரி பூவலிங்கம், உதவி ஆணையர் மாரிமுத்து, நகராட்சி தலைவர் கதிரவன் துவக்கி வைத்தனர். தேர் ரதவீதிகளில் வீதி உலா வந்து நிலைக்கு வந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.