மதுரை: மதுரை அம்மன்சந்நிதி தெருவில் உள்ள சிருங்கேரிமடத்தில் சாரதாம்பாள் கோயில் கும்பாபிஷேகத்தை பாரதீதீர்த்தசுவாமி நடத்தி வைத்தார். நேற்று காலையில் சாரதாம்பாள் கோயிலில் சுவாமி, மூர்த்தி பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சாரதாம்பாளுக்கு மகாஅபிஷேகம் செய்யப்பட்டது. விமானங்களில் புனித நீர் ஊற்றி, தீபாராதனை நடந்தது. இன்று காலை 7.30 மணிக்கு, மீனாட்சியம்மன் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் சந்திரமவுலீஸ்வர பூஜை நடக்கிறது. 10 மணிக்கு சுவாமி பக்தர்களுக்கு தரிசனம் அளித்து பிரசாதம் வழங்குகிறார். மாலை 4 மணிக்கு தேனி புறப்படுகிறார்.