பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில், லட்சுமி நரசிம்மர், பூதேவி, ஸ்ரீதேவி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
இக்கோவிலில் கடந்த, 29 நாட்களாக மார்கழி மாத சிறப்பு பூஜை அதிகாலை, 5.00 மணிக்கு நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, திருப்பாவை பாடலை பாடி, லட்சுமி நரசிம்மரை வழிபட்டனர். மார்கழி மாத நிறைவு நாளான, நேற்று திருப்பாவை பாடலை பாடி, மார்கழி மாத விரதத்தை முடித்துக் கொண்டனர். நிகழ்ச்சியையொட்டி, லட்சுமி நரசிம்மருக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனைகள் நடந்தன. விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானமும் நடந்தது.