பதிவு செய்த நாள்
15
ஜன
2021
06:01
புன்செய்புளியம்பட்டி: பொங்கல் விழாவையொட்டி, நேற்று காலை புன்செய் புளியம்பட்டி மாரியம்மன் கோவிலில், பாரம்பரிய முறைப்படி, மாட்டு வண்டியில், ஏர் கலப்பை பூட்டி, கன்று குட்டிகளுக்கு மாலை அணிவித்து, சிறப்பு பூஜைகள் நடந்தன. சூரிய பகவானை நோக்கி பானை வைத்து, மஞ்சள் குலை, கரும்பு வைத்து, பால் பொங்கும் போது பெண்கள் குலவை எழுப்பி கொண்டாடினர். இதில், பங்கேற்றவர்கள் பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், சிறப்பு யாகம் மற்றும் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது.