கள்ளக்குறிச்சி கோவில்களில்சூரிய பகவானுக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜன 2021 06:01
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள கோவில்களில் மகர சங்கராந்தியையொட்டி சூரிய பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தது.கள்ளக்குறிச்சி கோவில்களில் உத்தராயன புண்ணியகால மகர சங்கராந்தி சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதர் கோவிலில் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டது. அதேபோல் புண்டரீவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள், சிதம்பரேஸ்வரர், முத்துமாரியம்மன், திரவுபதி அம்மன், கங்கையம்மன், வாசவி கன்னிகா பரமேஸ்வரி, காந்தி ரோடு சக்தி விநாயகர், காய்கறி மார்க்கெட் கற்பக விநாயகர், அரசமரத்தடி விநாயகர், அண்ணா நகர் விஷ்ணு துர்க்கையம்மன், கமலா நேரு தெரு காமாட்சி அம்மன், நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர் ஆகிய கோவில்களில் மகர சங்கராந்தியையொட்டி சூரிய பகவானுக்கு பூஜைகள் நடத்தப்பட்டது.தொடர்ந்து கோவில்களில் உள்ள சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் பலர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.