சிறப்பு அலங்காரத்தில் வரதராஜபெருமாள் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜன 2021 10:01
பண்ருட்டி : பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவிலில் தைமாதம் முதல்வெள்ளியை முன்னிட்டு, உற்சவர் பெருந்தேவி தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் 15ம்தேதி தை மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு உற்சவர் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், 10:00 மணிக்கு தீபாராதனை நடந்தது.மாலை 6:00 மணிக்கு உற்சவர் பெருந்தேவி தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7:00 மணிக்கு உள்புறப்பாடு நடந்து, 7:30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.