பதிவு செய்த நாள்
17
ஜன
2021
10:01
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், அருணாசலேஸ்வரர் கிரிவலம் சென்று, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பராசக்தி அம்மனை வழி படாமல், அருணாசலேஸ்வரரை மட்டும் வழிபட்ட, பிருங்கி மகரிஷி முனிவருக்கு காட்சி கொடுக்க, அருணாசலேஸ்வரர் செல்ல, இதை பராசக்தி அம்மன் தடுக்க, இதில், இருவருக் குமிடையே திருவூடல் ஏற்பட்டு, இதை சுந்தர மூர்த்தி நாயனார் சமாதானம் செய்ய முயன்று, சமாதானமாகாத அருணா சலேஸ்வரர் கிரிவலம் செல்லும் நிகழ்வு நடந்தது. வழியில் பிருங்கி மகிரிஷி முனிவருக்கு காட்சி அளித்தல் நிகழ்ச்சியும், அப்போது, சுவாமி தன் நகைகளை, கொள்ளையர் களிடம் பறிகொடுத்து, கோவி லுக்கு திரும்பும் நிகழ்வும் நடந்தது. அருணாசலேஸ்வரர் கிரி வலம் சென்றபோது, வழி நெடுகிலும் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தி வழிபட்டனர். ?தொடர்ந்து கோவிலில், இரவு சுவாமிக்கும், அம்மனுக்கும் இடையே, மறுவூடல் ஏற்பட்டு சமாதானம் அடையும் விழா நடந்தது. இதை தொடர்ந்து, சிவ னும், சக்தியும் சரிபாதி என்பதை உணர்ந்த பிருங்கி மகிரிஷி, தன் தவறை உணர்ந்து சுவாமியையும், அம்மனையும் வழிபட தொடங் கினார். மறுஊடலை காணும் தம்பதியினருக்கு, இல்லற வாழ்வில், ஒற்றுமை பலப்படும் என்பது, பக்தர்களின் நம்பிக்கை யாக உள்ளது.