பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜன 2021 05:01
ப.வேலூர்: கபிலர்மலை பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், கொடியேற்றத்துடன் தேர் திருவிழா தொடங்கியது. ப.வேலூர் தாலுகா கபிலர் மலையில் பிரசித்தி பெற்ற பாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு மேல் சஷ்டி திதி ரேவதி நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுப லக்னத்தில் கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்கியது. நேற்றிரவு சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. தினசரி இரவு திருவிழா நிறைவு நாள் முடிய பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வருகிறார். வரும், 28 தைப்பூசத்தன்று அதிகாலை, 4:30 மணிக்கு மேல், 6:00 மணிக்குள் திருத்தேருக்கு சுவாமி எழுந்தருளுகிறார். மாலை, 4:00 மணியளவில் தேரோட்டம் நடைபெறவுள்ளது.