பதிவு செய்த நாள்
22
ஜன
2021
05:01
மோகனூர்: மோகனூர் காந்தமலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஆண்டு தோறும், தை பூசத்தேர் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா, வரும், 28ல், கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, கிராம சாந்தியுடன் நிகழ்ச்சி துவங்கியது. நேற்று காலை, 10:30 மணிக்கு, கோவில் வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில், திருக்கொடி ஏற்றப்பட்டது. தினமும், இரவு, 7:00 மணிக்கு, சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. அன்னம், பூதம், ஆட்டுக்கிடா, மயில், யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில், கோவிலை சுற்றி உலா வரும் சுவாமி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 28ல், காலை, 10:30 மணிக்கு, சுவாமி திருத்தேர் ஏற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு, திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது.