பதிவு செய்த நாள்
28
ஜன
2021
12:01
ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், குருபுஷ்ய விழா, நேற்று துவங்கியது.ஸ்ரீபெரும்புதுாரில், ராமானுஜரின் அவதார தலமான ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் உள்ள ராமானுஜருக்கு, தானுகந்த திருமேனி சிலை, தை மாதம், பூச நட்சத்திரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.பூச நட்சத்திரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் அந்நாள், குருபுஷ்யம் விழாவாக, ஸ்ரீபெரும்புதுாரில், ஆண்டுதோறும், மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது.இந்தாண்டுக்கான விழா, நேற்று துவங்கியது. காலை, 8.00 மணிக்கு, ராமானுஜர் தங்க பல்லக்கிலும், மாலை, மங்களகிரி வாகனத்திலும் வீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.கொரோனா ஊரடங்கு காரணமாக, இதுவரை உள்புறப்பாடு மட்டுமே நடந்து வந்தது. 10 மாதங்களுக்கு பின், நேற்று, வெளிபுறப்பாடு நடந்ததால், ஸ்ரீபெரும்புதுாரில் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.தொடர்ந்து, இரவு திருவாய்மொழி சேவை, ஏகாந்த சேவை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர்.