பதிவு செய்த நாள்
28
ஜன
2021
12:01
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மற்றும் சின்னசேலம் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது.
கள்ளக்குறிச்சி சிவகாமி அம்மன் உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. நிகழ்ச்சியையொட்டி நந்தி பெருமானுக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான அபிேஷகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. பின் சிவனுக்கு சிறப்பு அலங்காரம், மகாதீபாராதனை நடந்தது. அதேபால், கள்ளக்குறிச்சி நீலமங்கலம் சாமியார்மடம் செம்பொற்ஜோதிநாதர் கோவில், நீலமங்கலம் சிவன் கோவில், கமலா நேரு தெரு ஏகாம்பரேஸ்வரர், ஏமப்பேர் விஸ்வநாதர், சோமண்டார்குடி சோமநாதீஸ்வரர், தென்கீரனுார் அருணாசலேஸ்வரர், தண்டலை சுயம்பு நாதேஸ்வரர், கனங்கூர் ராமநாதீஸ்வரர், வரஞ்சரம் பசுபதீஸ்வரர், சடையம்பட்டு கேதாரீஸ்வரர், ஆலத்துார் திருவாலீஸ்வரர் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு தேவாரம், திருவாசகம் பாடி நடத்தப்பட்டது. இதில், பக்தர்கள் பலர் பங்கேற்று தரிசனம் செய்தனர். சின்னசேலம் தென்பொன்பரப்பி சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அலங்காரம், நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள், மகா தீபாராதனை நடந்தது.சின்னசேலம் கங்காதீஸ்வரர், ராயர்பாளையம் குமாரதேவர் மடம் பழமலைநாதர், கூகையூர் பெரியநாயகி உடனுறை சொர்ணபுரீஸ்வரர், அசலகுசலாம்பிகை சமேத பஞ்சாட்சரநாதர் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.