சிவகாசி : சிவகாசி துர்கை பரமேஸ்வரி அம்மன் கோயில் ஐந்தாம் ஆண்டு வருஷாபிேஷக விழாவை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணிக்கு பால்குடம் ஊர்வலம் நடந்தது. அம்மனுக்கு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை, மாலை 5:00 மணிக்கு உற்ஸவமூர்த்தி அம்பாளுக்கு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7:00 மணிக்கு ரதவீதி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை சிவகாசி பஸ் ஸ்டாண்ட் ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தினர் செய்தனர்.