பள்ளிபாளையம்: எஸ்.பி.பி., காலனியில் உள்ள, ராஜ ராஜ ராஜேஸ்வரி அன்னை ஆலய கும்பாபிஷேகம் நடந்தது. பள்ளிபாளையம் அருகே, எஸ்.பி.பி., காலனி, ராஜ ராஜ ராஜேஸ்வரி அன்னைக்கு ஆலயம் அமைக்கப்பட்டது. இதன் கும்பாபிஷேக விழா, கடந்த, 26ல் துவங்கியது. நேற்று முன்தினம், விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, மூலமந்திர ஹோமம் நடந்தது. நேற்று காலை, கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.