ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாதசுவாமி கோயில் வைகாசி தேரோட்டம் இன்று நடக்கிறது. திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றுடன் துவங்கியது . விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் பவனி ,சமய சொற்பொழிவு நடந்தது. விழாவின் 7ம் நாளன்று திருக்கல்யாணம் நடந்தது.தொடர்ந்து இன்று காலை காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இரவு பல்லக்கு சேவை, உலா பாட்டு, வீதி புறப்பாடு நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் குருநாதன், செயல் அலுவலர் சரவணன் செய்து வருகின்றனர்.