பரமக்குடி: பரமக்குடி அடுத்த நயினார்கோவில் சௌந்தர்யநாயகி சமேத நாகநாதசுவாமி கோயிலின் வசந்தோத்ஸவ திருவிழா கடந்த மே 24ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் சுவாமி, அம்பாள் இந்திரவிமானம், வெள்ளி நந்தி, கம்ஸ, பூத, சிம்ம, கமல, யானை, ரிஷபம், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலா நடந்தது. (ஜூன் 2) காலை 8.45மணிக்கு கோயில் முன்பிருந்து சுவாமி, அம்பாள் தேர் புறப்பட்டு கோயிலைச் சுற்றி வந்து நிலையை அடைந்தது. ஜூன் 7ம் தேதி உற்சவசாந்தியுடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் ராணி சேதுபதி ராஜேஸ்வரி நாச்சியார், திவான் மகேந்திரன், செயல்அலுவலர் தெய்வச்சிலைஇராமசாமி ஆகியோர் செய்திருந்தனர்.