பதிவு செய்த நாள்
04
ஜூன்
2012
10:06
சிவகங்கை: நாட்டரசன் கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோவிலில் வைகாசி தேரோட்டம் நடந்தது. சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் பிரசித்தி பெற்ற கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் வைகாசி திருவிழா, கடந்த 26ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலையில் அம்மன் வெள்ளி கேடகம், இரவு சிம்மம், காமதேனு, யானை, பூத, வெள்ளி ரிஷப வாகனங்களில் புறப்பாடு நடந்தது. ஏழாம் நாளான கடந்த 1ம் தேதி இரவு அம்மன் தங்க ரதத்திலும், 8ம் நாளான கடந்த 2ம் தேதி வெள்ளி ரதத்தில் சன்னதியில் எழுந்தருளினார்.
தேரோட்டம்: விழாவின் 9 ம் நாளான நேற்று காலை 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார். காலை 10.30 மணிக்கு பக்தர்கள் தேரின் வடத்தை பிடித்து இழுக்க தேரோடும் வீதியை சுற்றி வந்து, காலை 11.50 மணிக்கு நிலையை அடைந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்ட பக்தர்கள் ஏராளமானோர் அம்மனை தரிசித்தனர்.