புதுச்சேரி: வேதபுரீஸ்வரர் கோவில் மகோற்சவ விழாவில் நேற்று ரத உற்சவம் நடந்தது.புதுச்சேரி காந்தி வீதி திரிபுரசுந்தரி சமேத வேதபுரீஸ்வரர் கோவிலில் 31ம் ஆண்டு மகோற்சவ விழா, கடந்த 23ம் தேதி துர்கா பூஜையுடன் துவங்கியது. 24ம் தேதி எல்லையம்மன் பூஜை, 25ம் தேதி விக்னேஸ்வர பூஜை நடந்தது. 26ம் தேதி கொடியேற்றமும், பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடந்தது. தொடர்ந்து விழா நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து, தினம் ஒரு வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.நேற்று காலை 7.30 மணிக்கு ரத உற்சவம், மாலை அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.