நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் நேற்று ரதசப்தமி திருவிழா நடந்தது. அதனையொட்டி, நேற்று காலை 7:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. தொடர்ந்து கெடிலம் ஆற்றில் கைலாசநாதருக்கு தீர்த்தவாரி நடந்தது. ரதசப்தமி அன்று காலையில் சூரிய ஒளி கைலாசநாதர் மூலவர் மீது விழுவது ஐதீகம்.மதியம் 12:00 மணிக்கு விநாயகர், வள்ளி தேவசேனா சுப்ரமணியர், காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர், சண்டிகேஸ்வரர், அம்மன் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிேஷகம் நடந்தது.இரவு 7:00 மணிக்கு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதருக்கு திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு 9:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.