பரமக்குடி: பரமக்குடி பெருமாள் கோயில்களில் ரதசப்தமி விழா நடந்தது. பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பெருமாள் சிம்மாசனத்தில் எழுந்தருளினார். காலை 10:00 மணிக்கு கோயில் முன்புறமுள்ள மண்டபத்தில் அமர்ந்த பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலை 4:30 மணிக்கு தேரில் எழுந்தருளிய பெருமாள் வீதிவலம் வந்து மாலை 6:00 மணிக்கு மேல் கோயிலை அடைந்தார்.*எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக நேற்று காலை 9:00 மணிக்கு பெருமாள் புஷ்ப தேரில் அமர்ந்தார். தொடர்ந்து எமனேஸ்வரம் முக்கிய வீதிகளில் வலம் வந்த பெருமாளுக்கு பக்தர்கள் வழிநெடுகிலும் தேங்காய் உடைத்து வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு மேல் பெருமாள் கோயிலை அடைந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.