நத்தம்: நத்தம் மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவை முன்னிட்டு அம்மன் மயில் வாகனத்தில் நகர்வலம் சென்றார்.கடந்த பிப்.15 அன்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. மறுநாள் காலை பக்தர்கள் கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் எடுத்து வந்து, காப்பு கட்டி விரதம் துவங்கினர். விழாவின் 5 வது நாளான நேற்று காலை பக்தர்கள் மேளதாளம் முழங்க அம்மனுக்கு பால்குடம் எடுத்து வந்தனர். மாலை அம்மன் மீனாட்சி அலங்காரத்தில் எழுந்தருளினார். இரவு முக்கிய வீதிகளில் மயில் வாகனத்தில் நகர்வலம் சென்றார்.மார்ச் 1 அன்று மஞ்சள் பாவாடை எடுத்தல், அரண்மனை பொங்கல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். மார்ச் 2 அன்று விழாவின் முக்கிய நிகழ்வாக கழுமர ஏற்றம், பூக்குழி இறங்குதல் நடைபெறும். மறுநாள் மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடையும்.