பதிவு செய்த நாள்
25
பிப்
2021
11:02
புதுச்சேரி- கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா கோவிலில், பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. புதுச்சேரி கிழக்கு கடற்கரைச்சாலை கருவடிக்குப்பத்தில், பிரசித்தி பெற்ற குரு சித்தானந்தா சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், மாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று மாலை நந்தி பகவானுக்கு, பால், தயிர், பன்னீர், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட மங்கள திரவியங்கால் சிறப்பு அபி ேஷகம் நடந்தது. அதைத் தொடர்ந்து, சுவாமிக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பிரதோஷ வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை, தேவசேனா குருக்கள், சேது குருக்கள், சீனு குருக்கள் செய்திருந்தனர்.