Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராம நாமம் பாடினால் துன்பங்கள் ... நாகப்பட்டினத்தில் 12ம் நுாற்றாண்டு சோழர் கால சிலைகள் கண்டெடுப்பு நாகப்பட்டினத்தில் 12ம் நுாற்றாண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தருமபுரம் ஆதீனம் குரு மகா சன்னிதானம் ஜென்ம நட்சத்திரம்: திருக்கடையூரில் சிறப்பு ஹோமம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தருமபுரம் ஆதீனம் குரு மகா சன்னிதானம் ஜென்ம நட்சத்திரம்: திருக்கடையூரில் சிறப்பு ஹோமம்

பதிவு செய்த நாள்

01 நவ
2026
11:11

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சன்னிதானத்தின் ஜென்ம நட்சத்திர திருநாளை முன்னிட்டு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சிறப்பு ஹோமம் மற்றும் கலசாபிஷேகம் நடைபெற்றது.


மயிலாடுதுறை அருகே தருமபுரத்தில் 16ம் நூற்றாண்டில் குருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட முதன்மையான சைவ ஆதீன திருமடம் உள்ளது. தருமபுரம் ஆதீனத்தின் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் அருளாட்சி செய்து வருகிறார். குருமகா சன்னிதானத்தின் 61வது அவதார ஜென்ம நட்சத்திர பெருவிழா புனர்பூசம் நட்சத்திர தினமான இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் குருமகா சன்னிதானம் காலை திருமடத்தில் சொக்கநாதர் பூஜை செய்து, குரு மூர்த்தங்களில் வழிபாடு மேற்கொண்டார். 


தொடர்ந்து திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்த குரு மகா சன்னிதானத்திற்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்பம் கொடுத்து  வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து குருமகா சன்னிதானம் கோ பூஜை மற்றும் கஜ பூஜை செய்தார். கோவில் சங்கு மண்டபத்தில்16 கலசங்களில் புனித நீர் வைக்கப்பட்டு கணபதி, நவகிரக, தன்வந்திரி, மிருத்யுஞ்சய, ஆயுஷ் ஹோமங்கள் செய்யப்பட்டு குரு மகா சன்னிதானத்திற்கு கலசத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரைக் கொண்டு தட்சிணாமூர்த்தி சன்னதியில் சிவாச்சாரியார்கள் குருமகா சன்னிதானத்துக்கு கலசபிஷேகம், தீப ஆராதனை செய்து  வைத்தனர். முன்னதாக ருத்ர ஹோமம் செய்யப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு ருத்ராபிஷேகம் செய்யப்பட்டது. குருமகா சன்னிதானம் விநாயகர், முருகன், அமிர்தகடேஸ்வரர், கால சம்ஹார மூர்த்தி மற்றும் அபிராமி அம்பாள் சன்னதிகளுக்கு சென்று வழிபாடு நடத்தினார். இதனை அடுத்து தருமபுரம் ஆதீனம் குருமகா சன்னிதானம் கோவில் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ அபிராமி பட்டர் கலையரங்கத்தை திறந்து வைத்தார்.


இதில் திருப்பனந்தாள் காசி மடத்து அதிபர் ஸ்ரீமத் சபாபதி தம்பிரான், தருமபுரம் ஆதீன தம்பிரான் சுவாமிகள், தொழிலதிபர் சென்னை ஜெயராமன், மதுரை ராஜா பட்டர், ஆதீன கோயில்களின் கண்காணிப்பாளர் மணி, உள்துறை விருதகிரி, வெற்றிவேல், கார்த்திகேயன், சீர்காழி கோவில் செந்தில் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டு தரிசித்து திருவருளையும், குருவருளையும் பெற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: நாகப்பட்டினத்தில் தமிழக தொல்லியல் துறை சார்பில் நடந்து வரும் அகழாய்வில், 12ம் நுாற்றாண்டைச் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனையில் ... மேலும்
 
temple news
மகாராஷ்டிரா: மகாராஷ்டிர மாநிலம் திரிம்பகேஸ்வர் க்ஷேத்திரத்தில் சிம்மஸ்த கும்பமேளா தொடக்க விழா ... மேலும்
 
temple news
மகாராஷ்டிரா: மகாராஷ்டிர மாநிலத்தின் நாசிக் – திரிம்பகேஷ்வர் சிம்மஸ்த கும்பமேளா, பாரம்பரியக் ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத் மாநிலம் வதோதரா அருகே பய்லியில் உள்ள அர்ஷ வித்யா மந்திருக்கு, விஜயேந்திர சரஸ்வதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar