மதுரை:காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்றுமதுரைவருகிறார்.சொக்கிகுளம் பெசன்ட் ரோடு மடத்திற்குஇன்றுமாலை 6:00 மணிக்குவரும் அவருக்கு மதுரை மக்கள் சார்பில் பூர்ண கும்ப மரியாதைஅளிக்கப்படுகிறது. தொடர்ந்து அருளாசி வழங்குகிறார். நாளை காலை 9:30 முதல் திரிபுர சுந்தரி சமேத சந்த்ர மவுலீஸ்வர சுவாமிகளுக்கு பூஜை, பாத பூஜை, பிக்ஷா வந்தனம், தீர்த்தப் பிரசாதம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாலை 7:00 மணிக்கு சந்த்ர மவுலீஸ்வர பூஜை நடக்கிறது.பிப்.27ம் இதே போன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அன்று மாலை4:00 மணிக்குமதுரையில் இருந்து புறப்படுகிறார்.சுவாமிகளுக்கு பாத பூஜை செய்ய விரும்பும் பக்தர்கள் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளலாம் எனமடத்தின்நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.