தெய்வப்புலவர் திருவள்ளுவர் மாமிசம் உண்ணுதல் கூடாது என்று நமக்கு வழிகாட்டி இருக்கிறார். தன் ஊன் பெருக்கத் தான் பிறிது ஊன் உண்பான் எங்ஙனம் ஆளும் அருள் என்று நம்மிடம் கேள்வி கேட்கிறார். மற்ற உயிர்களின் மாமிசத்தை விரும்பி சாப்பிட்டு, உடம்பை வளர்ப்பவனிடம் இரக்கம், அருள் என்பது இருக்காது. அருளாளர்கள், பொருள் தேடுவது மட்டுமே வாழ்வின் நோக்கம் அல்ல. அருளும் தேட வேண்டும். அதற்கு அசைவம் கூடாது, என்கிறார்கள்.