புதுச்சேரி: திண்டிவனம் சீனிவாசப் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் இன்று நடக்கிறது.திண்டிவனம், நல்லிக் கோடன் நகர் சீனிவாசப் பெருமாள் மாசிமக தீர்த்தவாரிக்காக நேற்று புதுச்சேரிக்கு எழுந்தருளினார்.ஸ்ரீதேவி பூமிதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு அம்பலத்தடையார் மடத்து வீதி வடமுகத்து செட்டியார் திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.இதையொட்டி மாலையில் சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, அமர்மேல் மங்கா சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் மாசிமக கடல் தீர்த்த வாரி கமிட்டி கவுரவத் தலைவர் பொன்னுரங்கம், தலைவர் ஞானப்பிரகாசம் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.