பாகூர்: கிருமாம்பாக்கம் அடுத்த மூ.புதுக்குப்பம் கடற்கரையில் புதுக்குப்பம் கெங்கையம்மன் கோவில் சார்பில், மாசிமக தீர்த்தவாரி நேற்று நடந்தது.இதையொட்டி, கன்னியக்கோவில், பிள்ளையார்குப்பம், பாகூர், குருவிநத்தம், புதுக்குப்பம், மூர்த்திகுப்பம், வண்ணாங்குளம், பள்ளக்கொரவள்ளிமேடு, மஞ்சக்குப்பம், கடலுார் பகுதியில் இருந்து சுவாமிகள், புதுக்குப்பம் கடற்கரையில் எழுந்தருளினர். சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. நரம்பை கடற்கரையிலும் மாசிமக தீர்த்தவாரி நடந்தது.