ஹெப்பகோடி ஏரி அருகே உள்ள ஸ்ரீரேணுகா எல்லம்மா தேவி கோவில் விமான கோபுர கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
நாக விக்ரஹங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. பசுக்களுக்கு கோ மாதா பூஜை செய்யும் போது, மலர்கள் துாவப்பட்டன. ஸ்ரீ மஹா சமஸ்தானத்தின் போவி குருபீடத்தின் ஸ்ரீஜகத்குரு இம்முடி சித்தராமேஸ்வரா சுவாமிகள் கும்பாபிஷேகத்தை நடத்தினார்.போட்டியின்றி தேர்வுநெரலுார் கிராம பஞ்சாயத்து, புதிய தலைவராக பாரதி நாகராஜ், துணை தலைவராக சசி ஆகியோர், போட்டியின்றி நேற்று தேர்வு செய்யப்பட்டனர். உடனடியாக பொறுப்பேற்று கொண்ட அவர்கள், பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமங்களை மேம்படுத்துவதாக உறுதியளித்தனர். ஜோடி காளைகள் ரூ.8 லட்சம்ஜிகல கிராமதத்தை சேர்ந்த பிரசாந்த்ரெட்டி என்ற இளைஞர், எட்டு லட்சம் ரூபாய் மதிப்பில், இரண்டு காளைகள் வாங்கினார். அதை பார்க்க, அப்பகுதியை சேர்ந்த நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்த காளைகள், விவசாயத்துக்கு பயன்படுத்த முடிவு செய்துள்ளார்.