முத்துமாரியம்மன் கோயிலில் ரூ.11.86 லட்சம் உண்டியல் வசூல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மார் 2021 06:03
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி-பங்குனி விழா மார்ச் 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.விழாவிற்கு முன் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். நேற்று கோயில் உண்டியல் எண்ணும் பணி உதவி ஆணையர் சிவலிங்கம் தலைமையில் நடந்தது.ரூ.11 லட்சத்து 86 ஆயிரத்து 156, 11 வெளிநாட்டு கரன்சிகள், 100 கி தங்கம், 705 கி வெள்ளி பொருட்கள் இருந்தது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் சுமதி, கணக்கர் அழகுபாண்டி செய்திருந்தனர்.