பதிவு செய்த நாள்
05
மார்
2021
06:03
அந்தியூர்: அந்தியூர், தவுட்டுப்பாளையம், அழகுமுத்து மாரியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழா மாசி மாதம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு விழா, கடந்த மாதம், 16 ல், பூச்சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த, 23ல், கொடிசேலை கட்டும் நிகழ்ச்சி நடந்தது. கடந்த, 3 ல் குண்டம் இறங்குதல் நடந்தது. இதில் அந்தியூர், தவிட்டுபாளையம், வெள்ளயம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள், அதிகளவில் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையடுத்து சுவாமி ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை, அக்னி கரகம் எடுத்து வருதல், தொடர்ந்து கம்பம் ஆற்றுக்கு எடுத்துச் செல்லுதல், பின்னர் மஞ்சள் நீராட்டு விழாவுடன் பண்டிகை நிறைவடைகிறது.