சூலூர்: சூலூர் மேற்கு அங்காளம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சூலூர் பெரிய குளத்துக்கு அருகில் உள்ள மேற்கு அங்காளம்மன் கோவில் பழமையானது. இங்கு சிவராத்திரியை ஒட்டி, குண்டம் திருவிழா நடக்கும். கடந்த, 10 ம்தேதி கங்கணம் கட்டுதலுடன் திருவிழா துவங்கியது. நேற்று முன்தினம் மாலை சிவ ராத்திரி பூஜை மற்றும் பூக்குண்டம் வளர்த்தல் பூஜைகள் நடந்தன. நேற்று அதிகாலை அம்மை அழைக்கப்பட்டது. காலை, 4:30 மணிக்கு பூக்குண்டம் இறங்குதல் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது.