பதிவு செய்த நாள்
13
மார்
2021
03:03
ஆனைமலை:ஆனைமலையில் பழமை வாய்ந்த தர்மராஜா திரவுபதியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா துவங்கியுள்ளது. இதற்காக சர்க்கார்பதி வனப்பகுதியிலிருந்து, 80 அடி உயரமுள்ள மூங்கில் கொண்டு வரப்பட்டது. நேற்று காலை, 8:00 மணிக்கு உப்பாற்றங்கரையில் கம்பத்துக்கு வஸ்திரம், மலர் மாலைகள் சாற்றி, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.பின், முறைதாரர்கள், அருளாளிகள் முன்னிலையில், கம்பம் ஊர்வலமாக கோவில் வளாகத்தில் நடும் இடத்துக்கு கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பக்தர்கள் முன்னிலையில் கொடிக்கம்பம் நடப்பட்டது.தொடர்ந்து, 18ம் தேதி அம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது. 27ம் தேதி இரவு, அம்மன் ஆபரணம் பூணுதல், ஊர்வலம் நடக்கிறது. 28ம் தேதி திருத்தேர் வடம் பிடித்தல், குண்டம் பூ வளர்த்தல் நடக்கிறது. 29ம் தேதி காலை, 7:00 மணிக்கு குண்டம் இறங்குதல், திருத்தேர் ஊர்வலம் நடக்கிறது. 30ம் தேதி திருத்தேர் நிலை நிருத்தம், பட்டாபிஷேகம்; 31ம் தேதி இரவு போர் மன்னன் காவு நடக்கிறது.