பதிவு செய்த நாள்
14
மார்
2021
11:03
தர்மபுரி: தர்மபுரி, குமாரசாமிப்பேட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழாவையொட்டி, கடந்த, 9ல் காலை, 6:30 மணிக்கு சக்தி கரகம் அழைத்தல், இரவு, 7:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. நேற்று முன்தினம் காலை, பெண்கள் பால்குடம் எடுத்து வந்து, அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. இரவு, 9:00 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணமும், 11:00 மணிக்கு மேல், சிவன் பார்வதி அலங்காரத்தில் அம்மன் ஊர்வலமும், நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு மேல் முகவெட்டு ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை, 8:45 மணிக்கு பக்தர்களுக்கு அலகு போடுதல், 11:30 மணிக்கு அம்மன் மயான கொள்ளை செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இன்றிரவு, 7:30 மணிக்கு பல்லக்கு உற்சவம், நாளை பிள்ளைப்பாவு, கும்பபூஜை மற்றும் கொடியிறக்கம் நடக்கவுள்ளது. இதேபோல், தர்மபுரி வெளிபேட்டைதெரு அங்காளம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழாவை முன்னிட்டு, அம்மன் மயானம் செல்லும் நிகழ்ச்சி நடந்தது.