பத்ரகாளியம்மனுக்கு திருவிழா கோவிலில் நோன்பு சாட்டு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மார் 2021 03:03
உடுமலை: உடுமலை சங்கிலி வீதியில், பழமை வாய்ந்த, பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவில் திருவிழா இன்று, மாலை, 6:00 மணிக்கு, நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. வரும், 21-ம் தேதி, இரவு 7:00 மணிக்கு கருப்பண்ண சாமி பூஜை நடைபெறுகிறது.வரும், 22ம் தேதி, திருமூர்த்திமலையில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல் உட்பட நிகழ்ச்சிகள் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான அம்பாள் திருக்கல்யாணம், வரும், 29ம் தேதி காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.