திருப்பதியில் வருடாந்திர தெப்ப திருவிழா: வரும் 24ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2021 03:03
திருப்பதி: திருமலையில் வருடாந்திர தெப்ப திருவிழா வருகின்ற 24 ந்தேதி துவங்கி 28 ந்தேதி வரை நடைபெறுகிறது.
1468 ம் ஆண்டு சாளூவ நரசிம்ம ராயார் என்ற மன்னர் தெப்ப திருவிழாவிற்காக நிரலா மண்டபத்தை கட்டிக் கொடுத்துள்ளார். ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த தெப்ப திருவிழாவில் முதல் நாள் சீதையுடன் கூடிய ராமரும்,இரண்டாம் நாள் ருக்மணி சமேதரரான கிருஷ்ணரும்,மூன்று நான்கு ஐந்தாம் நாளான்று தேவியர் சமேதரராய் மலையப்பசுவாமியும் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.