பதிவு செய்த நாள்
19
மார்
2021
05:03
சென்னை: மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
சிவன் கோவில்களில், மிகவும் பிரசித்தி பெற்று விளங்கும், கபாலீஸ்வரர் கோவில், சென்னை, மயிலாப்பூரில் அமைந்துள்ளது. இங்கு சிவபெருமான் கபாலீஸ்வரராகவும், அம்பாள், கற்பகாம்பாளாகவும் அருள் பாலிக்கின்றனர்.இக்கோவிலில், ஆண்டு தோறும் பங்குனி பெருவிழா, 10 நாட்கள் விமரிசையாக நடக்கும்.கடந்த ஆண்டு நடக்க வேண்டிய பங்குனி பெருவிழா, கொரோனா ஊரடங்கால் தள்ளிப்போனது; அது, சமீபத்தில் எளிமையாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டிற்கான பங்குனி பெருவிழா, இன்று முதல், 30ம் தேதி வரை நடக்கிறது. விழாவின் முதல் நாளான இன்று, காலை 6:30 மணி முதல் 7:30 மணிக்கு கொடியேற்ற விழா சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நாளை மறுநாள் அதிகார நந்தி காட்சி, திருஞான சம்பந்தர் திருமுலைப்பால் விழா நடக்கிறது. பங்குனி உத்திர பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளின் ஒன்றான, தேர் திருவிழா வரும், 25ம் தேதி தேதி நடக்கிறது. அதைத் தொடர்ந்து, மாலை வெள்ளி விமானத்தில் இறைவன், அறுபத்து மூன்று நாயன்மார்களுடன் திருகாட்சி அருளும் நிகழ்ச்சி நடக்கிறது.