ஊட்டி:ஊட்டி மாரியம்மன் கோவில் விழா துவங்கியதால், வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும், என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோவில் செயல்அலுவலர் முத்துராமன் அறிக்கை:ஊட்டி மாரியம்மன் கோவில் திருவிழா துவங்கி, ஏப்., 23ம் தேதி நிறைவடைகிறது. நடப்பாண்டு கொரோனா நோய் காரணமாக, நிலையான வழிகாட்டு நெறி முறைகள் மற்றும் தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலில் இருப்பதால் கோவில் வளாகத்தில் அன்னதானம் நடத்துவது நிறுத்தி வைக்கப்பட்டது. பூஜை உள்ளிட்ட திருவிழா நிகழ்ச்சிகளை இரவு, 10:00 மணிக்குள் நடத்தி முடித்திட கோவில் நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தை சுற்றி தற்காலிக கடைகள் அமைப்பது இந்தாண்டு அனுமதிக்கப்படவில்லை. விழா நடைபெறும் காலத்தில் மாவட்டநிர்வாகம் மற்றும் போலீசார் தெரிவிக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.