ஆடம்பரமாக அலங்கரித்து கோயிலுக்கு வரும் பெண்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூன் 2012 03:06
ஆடம்பரம் என்று தாங்கள் குறிப்பிடுவது எதை? விலை உயர்ந்த புடவைகள் ஆபரணங்கள் இவைகளைத்தானே! இவ்வாறு அணிந்து வருபவர்களை ஆடம்பரம் என்ற சொல்லினால் இழிவுபடுத்த வேண்டாம். கவர்ச்சிகரமாக உடை அணிந்து வருபவர்களைக் கண்டால் தான் வேதனையாக இருக்கிறது. இந்து மரபு இவர்களால் பெரிதும் மீறப்படுகிறது. புனிதமான ஆலயச்சூழல் இவர்களாலும் இவர்களைத்தேடி அலைபவர்களாலும் வேறு விதமான சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறது. எனவே, கோவிலின்புனிதத்தைக் காப்பாற்ற ஒத்துழையுங்கள் என்று இவர்களை நாம் வேண்டி கொள்வோம். பெற்றோரின் கவனக் குறைவு தான் இதற்கு முக்கிய காரணம். காலச்சூழ்நிலையைக் கருதி ஆலயங்களில் அறிவிப்பு பலகைகள் மூலம் கவர்ச்சிகரமான உடை அணிந்து வருபவர்களைத் தடை செய்யலாம். மொபைலில் பேசுபவர்களையும், இந்த லிஸ்டில் சேர்த்து கொள்ள வேண்டும்.