மேலுார் : மேலுார் அம்பலகாரன்பட்டி வல்லடிகாரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது.இதில் வெள்ளலுார் நாட்டில் இருந்து 300 காளைகள், ஆயிரம் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பூரணி மற்றும் பொற்கலை அம்பாளுடன் வல்லடிகாரருக்கு திருக்கல்யாணம் நடந்தது.இன்று (மார்ச் 26) மதியம் கோயிலில் கிடா வெட்டி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி, இரவு வெள்ளிரதத்தில் சுவாமி அம்பாளுடன் வீதிவுலா நடக்கிறது. நாளை தேரோட்டம், 28ல் மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.