பதிவு செய்த நாள்
26
மார்
2021
02:03
உத்திரமேரூர்; நீர்குன்றத்தில், ஆஞ்சநேயர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா, நேற்று, விமரிசையாக நடந்தது.உத்திரமேரூர் அடுத்த நீர்குன்றம் கிராமத்தில், 10 ஆண்டுகளுக்கு முன், குரங்கு ஒன்று, கிராமவாசிகளுடன் பழகி வந்தது. ஒரு நாள் இரவு, அப்பகுதியில் உள்ள சிவன் கோவில் முன், குரங்கு இறந்து கிடந்தது. சோகத்தில் மூழ்கிய கிராமவாசிகள், பல்வேறு சடங்குகளுடன் நல்லடக்கம் செய்தனர்.தொடர்ந்து, குரங்கு உயிர் நீத்த, சிவன் கோவில் முன், ஆஞ்சநேயருக்கு கோவில் கட்ட முடிவு செய்தனர். இதையடுத்து, கிராமவாசிகள் பங்களிப்புடன், 4 லட்சம்ரூபாய் வசூலிக்கப்பட்டு, கடந்த ஆண்டு, கோவில் கட்டுமான பணி துவக்கப்பட்டு, 21 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்பட்டது.பணி முழுமையாக நிறைவு பெற்றதையடுத்து, நேற்று காலை, 10:00 மணிக்கு, ஆஞ்சநேயருக்கு, புனித நீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.