அவலுார்பேட்டை- அவலுார்பேட்டை அகத்தீஸ்வரர் கோவிலில் பங்குனி மாத புனர் பூச நட்சத்திரத்தை முன்னிட்டு நந்தியம் பெருமானுக்கும், சுயம்பிரபாவிற்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில் திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் திருமண பாக்கியம் வேண்டி வழிபட்டனர்.