வெள்ளி சப்பரத்தில் கொண்டத்து காளியம்மன் திருவீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2021 10:03
அனுப்பர்பாளையம்: பெருமாநல்லுார் கொண்டத்து காளியம்மன் குண்டம் திருவிழாவையொட்டி, வெள்ளி சப்பரத்தில் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பூரை அடுத்த பெருமாநல்லுாரில் பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் குண்டம் திருவிழா, 24ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது.விழாவில், நேற்று காலை 7:30 மணிக்கு கொண்டத்து காளியம்மன், வெள்ளி சப்பரத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.தொடர்ந்து, பெருமாநல்லுார் நான்கு ரத வீதிகளில், உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை உட்பட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று, 27ம் தேதி காலை, 7:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா வருதல், மாலை 7:00 மணிக்கு அம்மன் குதிரை வாகனத்தில் வீதி உலா வருதல் ஆகியன நடக்கிறது.