சிவாலயங்களில் பங்குனி பிரதோஷ வழிபாடு
பதிவு செய்த நாள்
27
மார் 2021 10:03
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஜோதிலிங்கேஸ்வரர் மற்றும் நந்திகேஸ்வரருக்கு பூஜைகள் நடைபெற்றன.ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவிலில், ராமலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் ராமலிங்கேஸ்வரர் அருள்பாலித்தார். மாகாளியம்மன் கோவிலில், ருத்ரலிங்கேஸ்வரர் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிேஷகம் அலங்கார பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ருத்ரலிங்கேஸ்வரர் அருள்பாலித்தார்.சுப்ரமணிய சுவாமி கோவில் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சமூக இடைவெளி பின்பற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.வால்பாறைவால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதர் சன்னதியில், நேற்று மாலை, 6:00 மணிக்கு பிரதோஷ பூஜை நடந்தது.சிவபெருமானுக்கு பால், தயிர், பன்னீர், மஞ்சள்,இளநீர், தேன், சந்தனம், திருநீறு, குங்குமம், பஞ்சாமிர்தம், அரிசிமாவு, என, 16 வகையான அபிேஷக பூஜை நடந்தது. அதன்பின், சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு காசிவிஸ்வநாதர், தேவியருடன் எழுந்தருளி, ரிஷப வாகனத்தில் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.உடுமலைஉடுமலை ரத்தினம்பிகை உடனுறை ரத்தினலிங்கேசுவரர் கோவிலில், சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில், ரத்தினலிங்கேசுவரர், நந்திபகவான் அருள்பாலித்தனர்.குறிஞ்சேரி ரிண விமோசன லிங்கேஸ்வரர் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. சோமவாரப்பட்டி அமரபுயங்கீஸ்வரர், ஏரிப்பாளையம் சித்தாண்டீஸ்வரர் கோவில் உட்பட சிவாலயங்களில், நேற்று நடந்த பிரதோஷ பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
|