கோத்தகிரி: கோத்தகிரி கடைவீதி பண்ணாரி அம்மன் கோவில் பூ குண்டம் தேர் திருவிழா நடந்தது.கடந்த, 26ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. முக்கிய திருவிழா நாளான நேற்று, அதிகாலை, 6:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது.தொடர்ந்து, 7:00 மணிக்கு பூ குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், 200க்கும் மேற்பட்டோர் பயபக்தியுடன் பூ குண்டம் இறங்கினர். தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.கோத்தகிரியில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். வரும், 5ம் தேதி மறுபூஜையுடன், விழா நிறைவடைகிறது.