பதிவு செய்த நாள்
01
ஏப்
2021
06:04
புதுச்சேரி : உருளையன்பேட்டை சுப்பையா நகரில் அமைந்துள்ள வேதவிநாயகர் முக்கூடல் சுவர்ணமுத்து மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் வரும் 2ம் தேதி நடக்கிறது.
இதையொட்டி இன்று (31ம் தேதி) காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கோ பூஜையுடன் துவங்குகிறது.மதியம் 12:00 மணிக்கு யாகசாலை அலங்காரம், கலவச ஸ்தாபனமும், மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜை, மூல மந்திர ஹோமம் நடக்கிறது. நாளை (1ம் தேதி) காலை 8:00 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜை, மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாக சாலை பூஜை நடக்கிறது. வரும் 2ம் தேதி காலை 6 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, காலை 9:45 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் மூலவர் விமான மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.பின், வேதவிநாயகர், சுப்ரமணியர், சுவர்ண முத்து மாரியம்மன், குரு தட்சிணாமூர்த்தி, துர்க்கையம்மன், நவக்கிரகம், நாகலிங்கம் சன்னதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.