கீழக்கரை: கீழக்கரை பன்னாட்டார் தெருவில் புனித அந்தோனியார் சர்ச் உள்ளது.
இங்கு நேற்று பெரிய வியாழன் தினத்தை முன்னிட்டும், ஏசுநாதர் சீடர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நற்கருனணை வழங்கிய நாளாக பெரிய வியாழன் கொண்டாடப்படுகிறது. நேற்று காலை 7 மணி அளவில் சர்ச்சில் சிறப்பு திருப்பலியும் பிரார்த்தனைகள் உள்ளிட்டவைகள் நடந்தது. பங்குதந்தை ரெமிஜியஸ் ஆராதனைகளை நடத்தினார். ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். முத்துப்பேட்டை புனித காணிக்கை அன்னை சர்ச், சாயல்குடி அன்னை வேளாங்கண்ணி சர்ச், மூக்கையூர், ரோஜ்மா நகர் உள்ளிட்ட சர்ச்சுகளில் பெரிய வியாழன் கொண்டாடப்பட்டது.