மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அடுத்த ஆலாங்கொம்பில், பவானி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள, மாரியம்மன் கோவிலில் திருவிழா நடந்தது. கடந்த மாதம், 23 ம் தேதி திருவிழா பூ சாட்டப்பட்டது. 30 ம் தேதி அம்மன் அழைத்து வரப்பட்டது. நேற்று அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையும், அபிஷேகமும் செய்யப்பட்டது. பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர். இன்று மறு பூஜையும், மஞ்சள் நீராட்டும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.