கடும் கட்டுப்பாடுகளுடன் ஹரித்வாரில் கும்ப மேளா துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஏப் 2021 11:04
ஹரித்வார்: கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடும் கட்டுப்பாடுகளுடன் ஹரித்வாரில் கும்ப மேளா திருவிழா துவங்கியது.
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மஹா கும்ப மேளா நடக்கும். இம்முறை கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கும்ப மேளா விழாவை ஹரித்வாரில் ஒரு மாதம்மட்டுமே கொண்டாட முடிவு செய்யப்பட்டது.அதன்படி கடும் கட்டுப் பாடுகளுடன் நேற்று கும்ப மேளா திருவிழா துவங்கியது. கங்கை நதியில் புனித நீராட வரும் பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுஉள்ளன. கொரோனா வைரசுக்கான பரிசோத னைகளை செய்து அதில் தங்களுக்கு பாதிப்பு இல்லை என்பதற்கான சான்றிதழை காண்பித்தால் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.