மரக்காணம் : மரக்காணம் அடுத்த அனுமந்தை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.
மரக்காணம் அடுத்த அனுமந்தை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 10 நாள் திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 23ந் தேதி கொடியேற்றி, காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் இரவு காளி முறம் ஏந்துதல் நிகழ்ச்சி நடந்தது. மறுநாள் காலை 10.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின் பூங்கரகம் வீதியுலா நடந்தது. மாலை 4.00 மணிக்கு பரம்பரை அறங்காவலர்கள் சின்னசாமி, ராஜேந்திரன், ரவிவர்மன் ஆகியோர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருதேர் இழுத்து நிகழ்ச்சியை தொடக்கிவைத்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். பின் பாவாடைராயன் சூரசம்காரமும், மயான கொள்ளை நிகழ்ச்சியும் நடந்தது. இரவு அம்மன் பூ அலங்கர வாகனத்தில் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.