காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் பங்குனி தெப்பத் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஏப் 2021 06:04
காரைக்கால்; காரைக்கால் கைலாசநாதர் கோவில் பங்குனி உத்திர பிரமோற்சவ தெப்ப திருவிழா நடந்தது.காரைக்கால் கைலாசநாதர் கோவில் பங்குனி உத்திர பிரமோற்சவ விழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 20 மற்றும் 23ம் தேதிகளில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது. 24ம் தேதி கைலாசநாதர் யானை, வெள்ளி ரிஷப வாகனத்திலும் வீதி உலா, திருக்கல்யாணம் மற்றும் 28ம் தேதி தேர்திருவிழா நடந்தது. 31ம் தேதி இரவு தெப்பத் திருவிழா நடந்தது. சுந்தராம்பாள் சமேதராக கைலாசநாதர் தெப்பத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.